அத்தீன் – அத்தி மரம்

அத்தியாயம் : 95

வசனங்களின் எண்ணிக்கை: 8

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அத்தி மரத்தின்மீதும், ஸைத்தூன் மரத்தின்மீதும் சத்தியமாக!647
2. ‘தூர் ஸினாய்’ மலையின்மீதும் சத்தியமாக!
3. பாதுகாப்பான இந்த (மக்கா) நகரின்மீது சத்தியமாக!
4. மனிதனை அழகிய தோற்றத்தில் நாம் படைத்தோம்.
5. பிறகு அவனைத் தாழ்ந்தோரிலும் தாழ்ந்தவனாக்கினோம்.
6. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோரைத் தவிர! அவர்களுக்கு முடிவுறாத கூலி உண்டு.
7. (மனிதனே!) இதற்குப் பிறகும் தீர்ப்பு நாள் விஷயத்தில் உன்னை மறுக்கச் செய்வது எது?
8. தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் மிகச் சிறந்த தீர்ப்பளிப்பவன் இல்லையா?