அத்தியாயம் : 99
வசனங்களின் எண்ணிக்கை: 8
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. பூமி கடுமையாக உலுக்கப்படும்போது,
2. பூமி, தனது சுமைகளைப் வெளியாக்கி விடும்போது,
3. “இதற்கு என்ன நேர்ந்து விட்டது?” என்று மனிதன் கேட்கும்போது,
4, 5. அதற்கு உமது இறைவன் அறிவித்தபடி அது தனது செய்திகளை அன்று எடுத்துரைக்கும்.
6. தமது செயல்கள் தமக்குக் காட்டப்பட வேண்டும் என்பதற்காக அந்நாளில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி வருவார்கள்.
7. யார் அணுவளவு நன்மை செய்கிறாரோ அவர் அதைக் கண்டு கொள்வார்.654
8. யார் அணுவளவு தீமை செய்கிறாரோ அவர் அதைக் கண்டு கொள்வார்.