அஷ்ஷரஹ் – விரிவாக்குதல்

அத்தியாயம் : 94

வசனங்களின் எண்ணிக்கை: 8

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (நபியே!) உமது உள்ளத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?
2. உம்மிடமிருந்து உமது சுமையை இறக்கினோம்.
3. அது உமது முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
4. உமது புகழை உமக்கு உயர்த்தினோம்.
5. கஷ்டத்துடனே எளிதானதும் இருக்கிறது.
6. கஷ்டத்துடனே எளிதானதும் இருக்கிறது.
7. எனவே, நீர் ஓய்வாகும்போது (வணக்கத்தில்) முனைப்புடன் ஈடுபடுவீராக!
8. உமது இறைவனிடமே ஆதரவு வைப்பீராக!