முரண்பாடுகளின் மொத்த உருவமே பைபிள்

முரண்பாடுகளின் மொத்த உருவமே பைபிள்

ஒரு வேதம் மனிதச் சொல்லா? அல்லது புனிதச் சொல்லா என்பதற்குரிய மிகத் துல்லியமான அளவுகோலை அல்குர்ஆன் 4:82 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிட்டு விட்டான். அந்த அடிப்படையில் பைபிள் இறை வேதமா என்று பரிசீலனைக்கு உட்படுத்திப் பார்ப்போம்.

முரண்பாடு: 1

கணக்கெடுக்கச் சொன்னது யார்? கடவுளா? ஷைத்தானா?

1 மீண்டும் இஸ்ரயேல் மீது ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. அவர்களுக்கு எதிராகச் செயல்பட அவர் தாவீதிடம், “புறப்பட்டுப் போய், இஸ்ரயேல், யூதா மக்களை எண்ணுவாய்” என்று தூண்டிவிட்டார்.

2 அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத் தலைவர்களையும் அழித்து, “மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தான் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையை கணக்கிடுங்கள்” என்றார்.

3 யோவாபு அரசரை நோக்கி, “ஆண்டவராம் கடவுள் வீரர்களை இப்போது இருப்பதைப் போல் இன்னும் நூறு மடங்கு மிகுதிப்படுத்துவாராக! என் தரைவராம் அரசர் இதைக் காண்பாராக! ஆனால் என் தலைவராம் ஆண்டவர் இதை செய்ய விரும்புவது ஏன்? என்று கேட்டார்.

4 இருப்பினும் யோவாபுக்கும் படைத்தலைவருக்கும் எதிராக அரசரின் வார்த்தையே நிலைத்தது. இஸ்ரயேல் வீரர்களைக் கணக்கிடுவதற்காக யோவாபும் படைத்தலைவர்களும் அரசர் முன்னிலையினின்று புறப்பட்டுச் சென்றனர்.

2 சாமுவேல் 24

1 சாத்தான் இஸ்ரயேலுக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடுமாறு தாவீதைத் தூண்டினான்.

2 தாவீது யோவாபையும், மற்றப் படைத்தலைவர்களையும் நோக்கி, “நீங்கள் போய் பெயேர்செபா தொடங்கி தாண்வரை வாழும் இஸ்ரயேல் மக்கள் தொகையைக் கணக்கிட்டு என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதை அறியவேண்டும்” என்றார்.

3 யோவாபு பதிலுரையாக, “ஆண்டவர் தன் மக்களை இப்போது இருப்பதினும் நூறு மடங்கு மிகுதியாய்ப் பெருகச் செய்வாராக! என் தலைவராகிய அரசரே, அவர்கள் யாவரும் என் தலைவரின் பணியாளர் அன்றோ! என் தலைவர் இதை ஏன் நாட வேண்டும்? இஸ்ரயேலின் மீது பழி விழக் காரணமாக வேண்டும்?” என்றார்.

4 இறுதியில், அரசரின் கட்டளை யோவாபைப் பணிய வைத்தது. எனவே யோவாபு புறப்பட்டுப்போய் இஸ்ரயேல் நாடெங்கும் சென்று எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.

1 நாளாகமம் 21

முரண்பாடு: 2

மூன்று வருடங்களா? ஏழு வருடங்களா?

காத்து தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது; “உனது நாட்டில் ஏழு ஆண்டு பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப் பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து முடிவுசெய்”

  1. சாமுவேல் 24:13

காத்து தாவீதிடம் சென்று “ஆண்டவர் கூறுவது இதுவே; நீயே தேர்ந்துகொள்; மூன்று ஆண்டுப் பஞ்சமா? உன் எதிரிகளின் வாளுக்கு அஞ்சி மூன்று மாதம் அவர்கள் முன் ஓடுவதா? இஸ்ரயேல் நாடெங்கும் சாவுண்டாகும்படி ஆண்டவரின் தூதர் மூன்று நாள்கள் நாட்டில் வருவிக்கும் ஆண்டவரின் வாளான கொள்ளை நோயா? இப்போது, என்னை அனுப்பியவருக்குப் பதிலளிக்குமாறு உம் முடிவைக் கூறும்” என்றார்.

1 நாளாகமம் 21:11,12

பஞ்சம் ஏற்படும் என்று கூறியது மூன்று வருடங்களா? அல்லது ஏழு வருடங்களா? எது உண்மை?

முரண்பாடு: 3

எட்டு வயதா? பதினெட்டு வயதா?

யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது எட்டு; எருசலேமில் அவன் மூன்று மாதம் பத்து நாள்களே ஆட்சி செய்து, ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்.

2 நாளாகமம் 36:9

யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. எருசலேமில் மூன்று மாதமே அவன் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த எல்நாத்தானின் மகள் நெகுஸ்தா என்பவளே அவனுடைய தாய்.

2 ராஜாக்கள் 24:8

யோயாக்கீன் என்பவர் அரசராகும் போது அவருக்கு எட்டு வயதா? பதினெட்டு வயதா?

முரண்பாடு: 4

எழுநூறா? ஏழாயிரமா?

சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாக புறமுதுகாட்டி ஓடினர். சிரியருள் எழுநூறு தேர் வீரர்களையும், நாற்பதாயிரம் குதிரை வீரர்களையும் தாவீது கொன்றார். மேலும் படைத் தலைவன் சோபாக்கை அவர் வாளால் தாக்க அவனும் அங்கே மடிந்தான்.

2 சாமுவேல் 10:18

சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர். தாவீது சிரியர் படையின் ஏழாயிரம் தேர்ப் படை வீரரையும், நாற்பதாயிரம் காலாள் படையினரையும், வெட்டி வீழ்த்தினார்; படைத் தலைவன் சோபாகையும் கொன்றார்.

1 நாளாகமம் 19:18

தாவீது கொன்றது எழுநூறு தேர் வீரர்களா? அல்லது ஏழாயிரம் தேர் வீரர்களா?

நாற்பதாயிரம் காலாட்படையினரா? நாற்பதாயிரம் குதிரைப் படையினரா?

கடவுள் இங்கு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார். காரணம் அவருக்குக் காலாட்படைக்கும் குதிரைப் படைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

முரண்பாடு: 5

இரண்டாயிரமா? மூன்றாயிரமா?

வார்ப்புக் கடலின் கன அளவு நான்கு விரற்கடை; அதன் விளிம்பு பானையின் விளிம்பைப் போலவும் அல்லி மலரைப் போலவும் விரிந்து இருந்தது. அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும்.

1 ராஜாக்கள் 7:26

தொட்டியின் கனம் நான்கு விரல் கடை. அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போன்றும், மலர்ந்த லீலியைப் போன்றும் இருந்தது. அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

2 நாளாகமம் 4:5

முரண்பாடு: 6

நான்காயிரமா? நாற்பதாயிரமா?

சாலமோன் குதிரைகளுக்கும் தேர்களுக்குமாக நாலாயிரம் கொட்டில்களையும், பன்னீராயிரம் குதிரை வீரர்களையும் கொண்டிருந்தார்; தேர்களைத் தேர்ப்படை நகர்களிலும் தம்முடன் எருசலேமிலும் நிறுத்தி வைத்திருந்தார்.

2 நாளாகமம் 9:25

சாலமோனுக்கு இருந்த தேர்க் குதிரை இலாயங்கள் நாற்பதினாயிரம்; குதிரை வீரர்கள் பன்னீராயிரம்.

1 ராஜாக்கள் 4:26

குதிரை லாயங்கள் நான்காயிரமா? நாற்பதாயிரமா? “4000க்குப் பின்னால் ஒரு பூஜ்யத்தை யாரேனும் சேர்த்திருக்கலாம் அல்லவா?” என்று தங்களைக் கொஞ்சம் புத்திசாலிகள் என்று கருதக் கூடிய கிறித்தவ நற்செய்தியாளர்கள் சப்பைக்கட்டு கட்டலாம். அந்தச் சப்பைக்கட்டும் எடுபடாது. காரணம் என்ன தெரியுமா? யூதர்கள் நான்காயிரம் என்று எழுத்தால் தான் எழுதினார்களே தவிர எண்ணால் எழுதவில்லை. அரபியர்கள் தான் பூஜ்யத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி அதை ஐரோப்பியர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.

கர்த்தரின் ராஜ்யம், இந்த பூஜ்யத்தை சாக்குச் சொல்லி, சப்பைக்கட்டு கட்டி தப்பித்துக் கொள்ள முடியாது.

இங்கே குறிப்பிட்டிருப்பது பைபிளில் இடம்பெற்றுள்ள முரண்பாடுகளில் சில எடுத்துக் காட்டுக்களைத் தான். மொத்த முரண்பாடுகளையும் இங்கே குறிப்பிடவில்லை. மொத்த முரண்பாடுகளையும் எடுத்துச் சொல்வதற்குத் தனி நூல்கள் வேண்டும்.

இப்போது பைபிள் நமக்குத் தெளிவாகச் சொல்கின்றது. நான் மனிதக் கை பட்ட ஒரு சாதாரண புத்தகம் தான்; நான் புனிதமிக்க இறை வேதமல்ல.

இப்படி பைபிள் தெளிவான வாக்குமூலம் கொடுத்த பின்பும் இதை இறைவேதம் என்று நம்பலாமா?

எனவே, தன்னிடம் முரண்பாடே இல்லை என்று ஆண்மை மிகு அறைகூவல் விடுத்து அழைக்கின்ற அல்குர்ஆனைச் சிந்திக்க வாருங்கள். அதை ஆய்வு செய்யுங்கள். ஆய்வு செய்து அது மனிதச் சொல் இல்லை; புனிதச் சொல் தான் என்று தெரிந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.