அந்நாஸ்- மனிதர்கள்

அத்தியாயம் : 114

வசனங்களின் எண்ணிக்கை: 6

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1, 2, 3, 4, 5, 6. “மனிதர்களின் கடவுளும், மனிதர்களின் அரசனுமாகிய மனிதர்களின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன். மறைந்திருந்து தீய எண்ணங்களை ஏற்படுத்துபவனின் தீங்கிலிருந்து (பாதுகாவல் தேடுகிறேன்.) அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களை ஏற்படுத்துகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் உள்ளனர்” என்று கூறுவீராக!669