அல்மாஊன் – அற்பப் பொருள்

அத்தியாயம் : 107

வசனங்களின் எண்ணிக்கை: 7

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (நபியே!) தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கூறுபவனை நீர் பார்த்தீரா?
2. அவன்தான் அநாதைகளைக் கடிந்து விரட்டுகிறான்.
3. ஏழைகளுக்கு உணவளிக்குமாறு அவன் தூண்டவில்லை.
4, 5. தமது தொழுகையில் அலட்சியமாக இருக்கும் தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.658
6. அவர்கள் பிறருக்குக் காட்டு(வதற்காகவே தொழு)கிறார்கள்.659
7. அற்பமான பொருளையும் (கொடுப்பதைத்) தடுக்கின்றனர்.660