அல்மஸத் – முறுக்கேறிய கயிறு

அத்தியாயம் : 111

வசனங்களின் எண்ணிக்கை: 5

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அபூலஹபின் இரு கைகளும் நாசமாகி விட்டன. அவனும் நாசமாகி விட்டான்.665
2. அவனுடைய செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயனளிக்கவில்லை.
3, 4. அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் நுழைவார்கள்.
5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு உள்ளது.