அல்லுஹா – முற்பகல்

அத்தியாயம் : 93

வசனங்களின் எண்ணிக்கை: 11

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. முற்பகல்மீது சத்தியமாக!
2. இருள் சூழும்போது இரவின்மீது சத்தியமாக!
3. (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவில்லை; வெறுக்கவுமில்லை.644
4, 5. உமக்கு இவ்வுலகைவிட மறுமைதான் சிறந்ததாகும்.645 விரைவில் உமது இறைவன் உமக்கு வழங்குவான். அப்போது நீர் திருப்தியடைவீர்.
6. அவன் உம்மை அநாதையாகக் கண்டு, பின்னர் அடைக்கலம் அளிக்கவில்லையா?
7. உம்மை வழியறியாதவராகக் கண்டு, பின்னர் நேர்வழி காட்டினான்.
8. அவன் உம்மை ஏழையாகக் கண்டு, பின்னர் தன்னிறைவு அடைந்தவராக்கினான்.646
9. எனவே, அநாதையிடம் கடுமை காட்டாதீர்!
10. யாசகம் கேட்பவரை விரட்டி விடாதீர்!
11. உமது இறைவனின் அருட்கொடையை எடுத்துரைப்பீராக!