அத்தியாயம் : 97
வசனங்களின் எண்ணிக்கை: 5
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. இ(வ் வேதத்)தை மதிப்புமிக்க இரவில் இறக்கினோம்.
2. மதிப்புமிக்க இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது? 651
3. மதிப்புமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்.
4. அதில் வானவர்களும், (ஜிப்ரீல் எனும்) ரூஹூம் தமது இறைவனின் ஆணைப்படி ஒவ்வொரு செயல்திட்டத்துடன் இறங்குகின்றனர்.
5. அமைதி (நிறைந்த இரவு). அது, அதிகாலை உதயமாகும்வரை இருக்கும்.