அல்காரிஆ – நடுங்க வைக்கும் நிகழ்வு

அத்தியாயம் : 101

வசனங்களின் எண்ணிக்கை: 11

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. நடுங்க வைக்கும் நிகழ்வு!
2. நடுங்க வைக்கும் நிகழ்வு என்றால் என்ன?
3. நடுங்க வைக்கும் நிகழ்வு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
4, 5. மனிதர்கள், அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று ஆகிவிடுவார்கள். மலைகள், பிரித்தெடுக்கப்பட்ட வண்ணக் கம்பளியைப் போன்று ஆகிவிடும்.
6, 7. யாருக்கு, அவரது (நன்மையின்) எடைகள் கனத்து விட்டதோ அவர் திருப்தியடைந்த வாழ்வில் இருப்பார்.
8, 9, யாருக்கு, அவரது (நன்மையின்) எடைகள் இலேசாகி விட்டதோ அவரது தங்குமிடம் ‘ஹாவியா’ தான்.
10. அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
11. (அது) கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.