அல்காஃபிரூன் – இறைமறுப்பாளர்கள்

அத்தியாயம் : 109

வசனங்களின் எண்ணிக்கை: 6

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1, 2. (நபியே!) நீர் கூறுவீராக: இறைமறுப்பாளர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன்.663
3. நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோர் அல்ல!
4. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்ல!
5. நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோர் அல்ல!
6. உங்களின் மார்க்கம் உங்களுக்கு! எனது மார்க்கம் எனக்கு!