அல்இஹ்லாஸ் – தூய்மைப்படுத்துதல்

அத்தியாயம் : 112

வசனங்களின் எண்ணிக்கை: 4

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் ஒருவனே!666
2. அல்லாஹ், தேவைகள் அற்றவன்.
3. அவன் (யாரையும்) பெறவில்லை. (யாராலும்) பெற்றெடுக்கப்படவும் இல்லை.
4. அவனுக்கு நிகராக எவருமே இல்லை.