அல்ஹுமஸா – குறை கூறுதல்

அத்தியாயம் : 104

வசனங்களின் எண்ணிக்கை: 9

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. குறைகூறிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்.
2. அவன் செல்வத்தைச் சேகரித்து அதை எண்ணிக் கொண்டிருந்தான்.
3. தனது செல்வம் (இவ்வுலகில்) தன்னை நிரந்தரமாக்கி வைக்கும் என அவன் நினைக்கிறான்.
4. அவ்வாறல்ல! அவன் ‘ஹுதமா’வில் வீசியெறியப்படுவான்.
5. ‘ஹுதமா’ என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
6. (அது) பற்ற வைக்கப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பாகும்.
7. அது இதயங்களை எட்டிவிடும்.
8, 9. அது நீண்ட கம்பங்களில் அவர்கள்மீது மூடப்பட்டதாக இருக்கும்.