அல்ஃபீல்- யானை

அத்தியாயம் : 105

வசனங்களின் எண்ணிக்கை: 5

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. உமது இறைவன் யானைப் படையினரை எவ்வாறு ஆக்கி விட்டான் என்பதை நீர் சிந்திக்கவில்லையா?657
2. அவர்களின் சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
3. கூட்டங் கூட்டமாகப் பறவைகளை அவர்களுக்கு எதிராக அனுப்பி வைத்தான்.
4. அவை, அவர்கள்மீது சுட்ட களிமண் கற்களை எறிந்தன.
5. மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவர்களை ஆக்கி விட்டான்.