அல்ஃபாத்திஹா – தொடக்கம்

அத்தியாயம் : 1

வசனங்களின் எண்ணிக்கை: 7

  1. அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.1
  2. அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.2
  3. (அவன்) அளவிலா அருளாளன்; நிகரிலா அன்பாளன்.
  4. தீர்ப்பு நாளின் அரசன்.
  5. உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்.
  6. எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!
  7. (அது) நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழி! அவர்கள் (உன்னால்) கோபிக்கப்பட்டவர்கள் அல்ல; வழி தவறியவர்களும் அல்ல!