அல்ஃபலக் – அதிகாலை

அத்தியாயம் : 113

வசனங்களின் எண்ணிக்கை: 5

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1, 2, 3, 4. 5. “அதிகாலையின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், இருள் சூழும்போது இரவின் தீங்கிலிருந்தும்,667 முடிச்சுகளில் ஊதுபவை(யான ஷைத்தான்)களின் தீங்கிலிருந்தும்,668 பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனது தீங்கிலிருந்தும் (பாதுகாவல் தேடுகிறேன்)” என்று கூறுவீராக!