அத்தியாயம் : 100
வசனங்களின் எண்ணிக்கை: 11
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. மூச்சிரைக்கப் பாய்ந்து செல்பவைமீது சத்தியமாக!
2. தீப்பொறியைக் கிளப்புபவைமீது சத்தியமாக!
3. அதிகாலையில் திடீர் தாக்குதல் தொடுப்பவைமீது சத்தியமாக!
4. அதன் மூலம் புழுதியைக் கிளப்புபவைமீது சத்தியமாக!
5. அதன் மூலம் படைகளுக்கு மத்தியில் செல்பவற்றின்மீது சத்தியமாக!
6. மனிதன், தன் இறைவனுக்கு நன்றிகெட்டவனாகவே இருக்கிறான்.
7. அவனே அதற்குச் சாட்சியாகவும் இருக்கிறான்.
8. செல்வத்தை நேசிப்பதில் அவன் கடுமையானவனாக இருக்கிறான்.
9, 10. மண்ணறைகளில் உள்ளவை வெளிப்படுத்தப்படும்போது, (அவரவர்) உள்ளங்களில் உள்ளவை தெளிவாக்கப்படும்போது (என்ன நிகழும் என்பதை) அவன் அறிந்து கொள்ள வேண்டாமா?
11. அன்று, அவர்களைப் பற்றி அவர்களின் இறைவனே நன்கறிந்தவன்.