அல்அஸ்ர்- காலம்

அத்தியாயம் : 103

வசனங்களின் எண்ணிக்கை: 3

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. காலத்தின்மீது சத்தியமாக!
2. மனிதன் நஷ்டத்திலேயே இருக்கிறான்.
3. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, உண்மையைக் கடைப்பிடிக்குமாறு ஒருவருக்கொருவர் அறிவுறுத்தி, பொறுமையை மேற்கொள்ளுமாறும் அறுவுறுத்திக் கொள்வோரைத் தவிர