பாடம் : 3 வீட்டுக்குள்ளேயே தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுவது.
6774. உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
குடி போதையிலிருந்து ‘நுஐமான்’ என்பவர், அல்லது ‘அவரின் புதல்வர்’ நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவரை அடிக்கும்படி வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்களும் (காலணியாலும் பேரீச்ச மட்டையாலும்) அவரை அடித்தார்கள். அவரைக் காலணியால் அடித்தவர்களில் நானும் ஒருவனாவேன்.6
Book : 86