86:6772 குற்றவியல் தண்டனைகள்

பாடம் தண்டனைக்குரிய குற்றங்கள் பற்றிய எச்சரிக்கை2 பாடம் : 1 விபசாரமும் குடியும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகன இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் விபசாரம் புரியும் போது, இறை நம்பிக்கையின் (ஈமான்) ஒளி அவரிடமிருந்து அகற்றப்படுகிறது.3 
6772. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (மது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான். (மக்களின் மதிப்புமிக்க) செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொளளையடிப்பவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.4 
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், அதில் கொள்ளையடிப்பது பற்றிக் கூறப்படவில்லை. 
Book : 86