பாடம் : 3 தொழும் போது வேஷ்டி (சிறியதாயிருந்தால் அதன் இரு முனை)யைப் பிடரியில் முடிச்சிட்டுக் கொள்வது. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (நபித்தோழர்கள்) சிலர் தங்களுடைய வேஷ்டிகளை தமது தோள்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் தொழுதனர்.
352. ‘ஜாபிர்(ரலி) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தங்களின் பிடரியில் முடிச்சுப் போட்டவர்களாகத் தொழுதார்கள். அவர்களின் இதர ஆடைகளோ துணி தொங்க விடப்படும் கம்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இவர்களிடம் ஒருவர், ‘ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு ‘உன்னைப் போன்ற மடையவர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரண்டு ஆடைகள் இருந்தன?’ என்று ஜாபிர்(ரலி) கேட்டார்’ என முஹம்மத் இப்னு அல் முன் கதிர் அறிவித்தார்.
Book : 8