பாடம் : 3 ஆடையை வரிந்து கட்டுவது
5786. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்
பிலால்(ரலி) (இரும்புப் பிடி போட்ட) ஒரு கைத்தடியைக் கொண்டு வந்து அதை (பூமியில் தடுப்பாக) நட்டு வைத்துப் பிறகு, தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்வதை கண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆடையை வரிந்து கட்டிக் கொண்டு (தம் அறையிலிருந்து) வெளியே வந்ததை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் கைத்தடி நடப்பட்டிருந்த திசையை நோக்கி (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மக்களும் (வாகனப்) பிராணிகளும் கைத்தடிக்கு அப்பால் நபி(ஸல்) அவர்களுக்கு முன் நடந்து செல்வதை பார்த்தேன்.6
Book : 77