77:5783 ஆடை அணிகலன்கள்

பாடம் : 1 ‘(நபியே!) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?’ எனும் (7:32ஆவது) இறைவசனம்.2 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்ணுங்கள்; பருகுங்கள்; உடுத்துங்கள்; தானம் செய்யுங்கள். (ஆனால்,) விரயம் செய்யாதீர்கள்;தற்பெருமை கொள்ளாதீர்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: விரயம் அல்லது தற்பெருமை ஆகிய இரண்டும் உன்னை அண்டாத வரை நீ விரும்பியதை உண்ணலாம்; நீ விரும்பியதை உடுத்தலாம். 
5783. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
தன்னுடைய ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். 
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
Book : 77