74:5575 குடிபானங்கள்

பாடம் : 1 நம்பிக்கை கொண்டோரே! மதுபானம், சூதாட்டம், ப-பீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியன ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் அடங்கும். ஆகவே, நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள் எனும் (5:90ஆவது) இறைவசனம். 
5575. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான்.2 
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
Book : 74