73:5547 குர்பானி (தியாக)ப் பிராணிகள்

பாடம் : 2 குர்பானிப் பிராணிகளை மக்களிடையே தலைவர் பங்கிடுவது. 
5547. உக்பா இப்னு ஆமிர் அல்ஜுஹைனீ(ரலி) கூறினார் 
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே குர்பானிப் பிராணிகளைப் பங்கிட்டார்கள். அப்போது எனக்கு (என்னுடைய பங்காக) ஒரு வயது பூர்த்தியான வெள்ளாட்டுக் குட்டி ஒன்று கிடைத்தது நான், ‘இறைத்தூதர் அவர்களே! ஒரு வயதுடைய வெள்ளாடுதான் எனக்குக் கிடைத்தது’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் ‘அதையே நீங்கள் குர்பானி கொடுங்கள்’ என்று கூறினார்கள்.5 
Book : 73