பாடம் : 1 நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையான உண்பொருட்களை உண்ணுங்கள் எனும் (20:81ஆவது) இறைவசனமும், நீங்கள் சம்பாதித்த நல்ல பொருள்களிலிருந்து செலவு செய்யுங்கள் எனும் (2:267 ஆவது) இறைவசனமும், (தூதர்களே) தூய்மையான வற்றிலிருந்து உண்ணுங்கள்; நற்செயல் புரியுங்கள். நீங்கள் செய்பவற்றை நான் நன்கறிபவன் ஆவேன் எனும் (23:51ஆவது) இறைவசனமும்.2
5373. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
பசியாளருக்கு உணவளியுங்கள். நோயாளியை நலம் விசாரியுங்கள். (போர்க் கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்.
என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.3
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறினார்:
(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அல்அனீ’ எனும் சொல்லுக்குக் ‘கைதி’ என்று பொருள்.
Book : 70