பாடம் : 4 மேலும், நாம் உங்கள் மீது மேகத்தை நிழ-டும்படி செய்தோம். உங்களுக்கு மன்னு, சல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள் (என்றும் உங்களிடம் கூறினோம். இக்கட்டளைகளை மீறியதால்) எமக் கொன்றும் அவர்கள் தீங்கி ழைத்து விடவில்லை. மாறாக, தமக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டார்கள் எனும் (2:57ஆவது) இறைவசனம். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: மன்னு என்பது வேலம் பசை ஆகும். சல்வா என்பது பறவை ஆகும்.11
4478. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
சமையல் காளான் (தானாக வளர்வதில்) ‘மன்னு’ வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
Book : 65