பாடம் : 2 (அவர்கள் உனது) கோபத்திற்குள்ளானவர் களும் அல்லர்; வழிதவறிச் சென்றவர்களும் அல்லர் (எனும்1:7ஆவது இறைவசனம்).9
4475. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
(தொழுகையில்) இமாம், ‘ஃகைரில் மஃக்ளுபி அலைஹிம் வ லள்ளால்லீன்’ என்று ஓதியவுடன் நீங்கள், ‘ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)’ என்று சொல்லுங்கள். ஏனெனில், வானவர்கள் ‘ஆமீன்’ கூறுவதுடன் ஒத்து ஆமீன் கூறுகிறவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 65