6:297 மாதவிடாய்

பாடம் : 3 மாதவிடாய் நிலையிலுள்ள தம் மனைவியின் மடியில் தலைவைத்த வண்ணம் ஒருவர் திருக்குர்ஆன் ஓதுவது. அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் மாதவிடாய் நிலையிலிருக்கும் தம் பணிப் பெண்ணை (தம் முன்னாள் அடிமையான) அபூரஸீன் (மஸ்ஊத்பின் மாலிக் – ரஹ்) அவர்களிடம் அனுப்பிவைத்து,திருக்குர்ஆனை வாங்கி வரச் சொல்வார்கள். அவள் அந்தக் குர்ஆனைக் கட்டியிருக்கும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அவர்களிடம் வருவாள். 
297. ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
Book : 6