3651. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். பின்னர், ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தை முந்திக் கொள்ளும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் நகயீ(ரஹ்) கூறினார்:
நாங்கள் விவரமில்லாத சிறுவர்களாயிருந்தபோது, ‘அஷ்ஹது பில்லாஹ் – அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் சாட்சியம் கூறுகிறேன்’ என்றோ, ‘அலய்ய அஹ்துல்லாஹ் – அல்லாஹ்வுடன் நான் செய்த ஒப்பந்தப்படி’ என்றோ சொன்னால் பெரியவர்கள் முஹாஜிர்களில் ஒருவர் தாம்.
அல்லாஹ் கூறினான்:
மேலும், (ஃபய்உ10 எனும் அச்செல்வம்) தங்களின் இல்லங்களைவிட்டும் – சொத்துக்களைவிட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்களுக்கு உரியதுமாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் அவனுடைய உவப்பையும் விரும்புகிறார்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவிபுரிந்திடத் தயாராயிருக்கிறார்கள். இவர்களே வாய்மையாளர்களாவர். (திருக்குர்ஆன் 59:08)
மேலும் அல்லாஹ் கூறினான்:
நீங்கள் இந்த நபிக்கு உதவாவிட்டால் (அதனால் என்ன?), இறை மறுப்பாளர்கள் அவரை வெளியேற்றியபோது, நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவியுள்ளான். அவர்கள் இருவரும் குகையில் தங்கியிருந்தபோது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் – தன் தோழரை நோக்கி, ‘கவலை கொள்ளாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்’ என்று கூறினர். (திருக்குர்ஆன் 09:40)
‘அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் (‘ஸ்வ்ர்’) குகையில் இருந்தார்கள்’ என்று ஆயிஷா(ரலி) அவர்களும், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறுகின்றனர்.
Book :62