3492. குலைப் இப்னு வாயில்(ரஹ்) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் – அவர்கள் ஸைனப்(ரலி) என்று எண்ணுகிறேன் – எனக்கு அறிவித்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவையையும், மண்சாடியையும், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய்களையும், தார் பூசப்பட்ட பாத்திரங்களையும் (பயன்படுதத வேண்டாமென்று) தடைவிதித்தார்கள்.
நான் அவரிடம், ‘நபி(ஸல்) அவர்கள் எந்தக் கோத்திரத்தவர்களாயிருந்தார்கள் என்று எனக்குத் தெரிவியுங்கள்; அவர்கள் முளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் நள்ர் இப்னு கினானாவின் சந்ததிகளில் ஒருவராவார்கள்’ என்று கூறினார்கள்.
Book :61