3491. குலைப் இப்னு வாயில்(ரஹ்) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அவர்களிடம் நான், ‘நபி(ஸல்) அவர்கள் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களா என்று எனக்குத் தெரிவியுங்கள்’ என்று கேட்டதற்கு, ‘முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் நள்ர் இப்னு கினானாவின் சந்ததிகளில் ஒருவராவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
Book :61