3490. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், ‘அவர்களில் இறையச்சமுடையவரே’ என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை’ என்றனர். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)’ என்று கூறினார்கள்.
Book :61