61:3489 நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

பாடம் : 21 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், மூசாவைப் பற்றி இவ்வேதத்தில் உள்ளதைக் கூறுவீராக: நிச்சயமாக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராகவும் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதராகவும் (நம்) செய்தியை எடுத்துரைக்கும் நபியாகவும் இருந்தார். மேலும், நாம் தூர் மலையின் வலப் பக்கத்திலிருந்து அவரை அழைத்தோம். தனியே உரையாடுவதன் மூலம் நம்மிடம் நெருங்கு வதற்கான வாய்ப்பை அவருக்கு அளித்தோம். மேலும், நம் தயவினால் அவருடைய சகோதரர் ஹாரூனை ஒரு நபியாக நியமித்து அவருக்கு உதவியாளராக ஆக்கினோம். (19:51-53) 71 மேலும் அல்லாஹ் கூறுகிறான்: ஃபிர் அவ்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த – தம் இறை நம்பிக்கையை மறைத்து வைத்திருந்த – இறை நம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்: ஒரு மனிதர் அல்லாஹ்தான் என் இறைவன் என்று கூறுகிறார் என்பதற்காகவா அவரை நீங்கள் கொன்றுவிடுவீர்கள்? அவரோ, உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்திருக்கின்றார். அவர் பொய்யராயிருந்தால் அவருடைய பொய் அவருக்கே கேடாக அமையும். ஆனால் அவர் உண்மையாளராய் இருந்தால், எந்த பயங்கரமான விளைவுகளைக் குறித்து அவர் உங்களை எச்சரிக்கை செய்கிறாரோ அவற்றில் சில அவசியம் உங்களை பீடிக்கவே செய்யும். எவன் வரம்பு மீறுபவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருக்கின்றானோ, அவனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. (40:28) 
3489. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார் 
‘மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஓர் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம்’ (திருக்குர்ஆன் 49:13) என்னும் இறைவசனத்தில் இடம் பெற்றுள்ள ‘ஷுவூப் சமூகங்கள்’ என்னும் சொல் பெரிய இனங்களையும் ‘கபாயில் – குலங்கள்’ என்னும் சொல், அந்த இனங்களில் உள்ள உட் பிரிவுகளையும் குறிக்கும்’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். 
Book : 61