3328. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்
உம்மு சுலைம்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் அவள் (மதன) நீரைப் பார்த்தால் (அவளின் மீது குளிப்பு கடமையாகும்)’ என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்டு நான் சிரித்தேன். ‘பெண்ணுக்குக் கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘பின் குழந்தை (தோற்றத்தில்) அவளை ஒத்திருப்பது எதனால்?’ என்று கேட்டார்கள்.
Book :60