3193. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்ந்தவனான அல்லாஹ் கூறினான்:
ஆதமின் மகன் என்னை ஏசுகிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். அவன் என்னை நம்ப மறுக்கிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். எனக்குக் குழந்தை இருப்பதாக அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ‘நான் அவனை ஆரம்பமாகப் படைத்ததைப் போன்றே மீண்டும் அவனை என்னால் (உயிராக்கிக்) கொண்டு வர முடியாது’ என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59