56:2782 அறப்போரும் அதன் வழிமுறைகளும்

பாடம் : 176 இஸ்லாமிய அரசின் கீழுள்ள பிற மதத்தவருக்காகப் பரிந்துரை செய்யலாமா? என்பதும், அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்கள் செய்வதும். 
2782. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். 
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது’ என்று கூறினார்கள். ‘பிறகு எது (சிறந்தது?)’ என்று கேட்டேன் அவர்கள், ‘பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது’ என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது (சிறந்தது?)’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுவதாகும்’ என்று பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் வேறெதுவும் கேட்காமல் மெளனமாகி விட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள். 
Book : 56