பாடம் : 2 மக்களிடையே சமாதானம் செய்து வைப்பவன் (அதற்காகப் பொய்யே கூறினாலும்) அவன் பொய்யன் அல்லன்.
2692. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.
என உம்மு குல்தூம் பின்த்து உக்பா(ரலி) அறிவித்தார்.
Book : 53