5:251 குளித்தல்

பாடம் : 3 ஒரு ஸாஉ அளவுள்ள தண்ணீரில் அல்லது ஏறக்குறைய அந்த அளவுத் தண்ணீரில் குளிப்பது. 
251. ‘நானும் ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரரும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அவர்களிடம் அவர்களின் சகோதரர் ‘நபி(ஸல்) அவர்களின் குளிப்பு எப்படியிருந்தது?’ என்று கேட்டதற்கு, ‘ஸாவு’ போன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குளித்தார்கள். தம் தலையின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் ஒரு திரை இருந்தது’ என்று ஆயிஷா(ரலி) கூறினார்’ என அபூ ஸலமா அறிவித்தார். 
Book : 5