பாடம் : 2 எந்த அடிமையை விடுதலை செய்வது மிகவும் சிறந்தது.
2518. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘எந்த நற்செயல் சிறந்தது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஈமான் எனும் நம்பிக்கை கொள்வதும் அவனுடைய பாதையில் ஜிஹாத் எனும் போராடுவதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். நான், ‘எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)’ என்று பதிலளித்தார்கள். நான், ‘என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘பலவீனருக்கு உதவு; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்’ என்று கூறினார்கள். நான், ‘இதுவும் என்னால் இயலாவில்லையென்றால்…? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்க செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்’ என்று கூறினார்கள்.
Book : 49