44:2414 வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்

பாடம் : 2 பேதை மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவனின் பொருளாதார நட வடிக்கைகளை2 ரத்து செய்வது செல்லும்; ஆட்சித் தலைவர் அவனது பொருளாதார நடவடிக்கைகளைத் தடை செய்து3 (இன்னும்) ஆணை பிறப்பிக்காமலிருந்தாலும் சரியே! ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகின்றது: நபி (ஸல்) அவர்கள் (ஏழை) ஒருவர் தர்மம் செய்த போது அந்த தர்மத்தை ரத்து செய்தார்கள். பிறகுதான், அந்த (ஏழை) மனிதர் தர்மம் செய்வதைத் தடைசெய்து ஆணை பிறப்பித்தார்கள். ஒரு மனிதர் கடனாளியாக இருந்து, அவரிடம் ஓர் அடிமையைத் தவிர வேறு செல்வம் ஏதும் இல்லாமலிருந்து அந்த அடிமையை அவர் விடுதலை செய்தால் அது செல்லுபடியாகாது என்று இமாம் மா-க் (ரஹ்) கூறுகிறார்கள். பாடம் : 3 ஒருவர் மூளை வளர்ச்சி குன்றிய ஒருவருக்காக அவரது பொருளை விற்று, அதை அவரிடமே கொடுத்து இதை சரியான முறையில் பயன்படுத்தி நன்கு பராமரித்து வைத்துக் கொள்ளும்படி கூற, அவர் அதைக் கெடுத்து(ப் பழுதாக்கி) விட முயன்றால் (விற்றுக் கொடுத்தவரோ, நீதிபதியோ) அவரை அதைக் கையாள விடாமல் தடுத்து விடலாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் பொருளை வீணாக்குவதைத் தடை செய்துள்ளார்கள். மேலும், வியாபாரத்தின் போது அடிக்கடி ஏமாற்றப்பட்டு வந்த ஒரு மனிதரிடம், நீ வியாபாரம் செய்யும் போது (எதையும் வாங்கும் போது அல்லது விற்கும் போது) ஏமாற்று, மோசடி எதுவும் கூடாது’ என்று சொல் என நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் (கடனாளி ஒருவர் ஆர்வத்தின் பேரில் தன் அடிமையை விடுதலை செய்ய முனைந்த போது, அந்த அடிமையை விற்று, விலையை அவரிடமே கொடுத்தார்கள். ஆனால்) அவருடைய (வேறு) செல்வத்தை அதற்குப் பிரதியாகக் கைப்பற்றவில்லை. 
2414. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
ஒருவர் வியாபாரத்தில் ஏமாற்றப்பட்டு வந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம், ‘நீ வியாபாரம் செய்தால் (எதையும் விற்றால் அல்லது வாங்கினால்) ‘ஏமாற்றுதல் கூடாது’ என்று சொல்’ என்றார்கள். அதன்படி அந்த மனிதர் (வியாபாரம் செய்யும் போதெல்லாம்) அவ்வாறே கூறி வந்தார். 
Book : 44