பாடம் : 3 கடனைத் திருப்பிச் செலுத்துதல்: அல்லாஹ் கூறுகிறான்: (முஸ்லிம்களே!) அடைக்கலப் பொருட்களை அவற்றுக்கு உரியவரிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள். (உங்க ளிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பு களையும் உரியமுறையில் நிறைவேற் றுங்கள்.) மேலும்,நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால், நீதியுடன் தீர்ப்பு வழங்குங்கள் என்று அல்லாஹ் உங்க ளுக்குக் கட்டளையிடுகின்றான். திண்ண மாக, அல்லாஹ் உங்களுக்கு வழங்குகின்ற அறிவுரை மிகவும் உன்னதமானதாகும். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். (4:58)
2388. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுது மலையைப் பார்த்தபோது, ‘இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும் கூட என்னிடம் மூன்று நாள்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்ப மாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கிற தீனாரைத் தவிர’ என்று கூறினார்கள். பிறகு, ‘(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தாம் (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள்; ‘(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்’ என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர .. (இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஷிஹாப்(ரஹ்), ‘இப்படியெல்லாம்’ என்பதற்கு விளக்கமாக முன் பக்கமாகவும், வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் சைகை செய்தார்கள்… ஆனால், ‘அப்படிப்பட்டவர்கள் (எண்ணிக்கையில்) குறைவானவர்களே’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘நீ இங்கேயே இரு’ என்று சொல்லி, சிறிது தூரம் முன்னால் சென்றிருப்பார்கள். அதற்குள் நபி(ஸல்) அவர்களுடன் யாரோ உரையாடுவதைப் போன்று) ஏதோ ஒரு குரலைக் கேட்டேன். ஆனால், நபி(ஸல்) அவர்கள், ‘நான் திரும்பி வரும் வரை நீ இங்கேயே இரு’ என்று கூறியதும் என் நினைவுக்கு வந்தது. நபி(ஸல்) அவர்கள் திரும்பிவந்தபோது நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் கேட்ட குரல் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(நீங்கள் அந்தக் குரலைச்) செவியுற்றீர்களா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, ‘உன் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணமடைந்து விடுகிறவர் சொர்க்கம் புகுவார்’ என்று கூறினார்கள். நான், ‘இப்படி இப்படியெல்லாம் செய்த வருமா (விபச்சாரக் குற்றமும், திருட்டுக் குற்றமும் புரிந்தவருமா) சொர்க்கம் புகுவார்?’ என்று கேட்டேன்.
ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘ஆம், (அவரும் சொர்க்கம் புகுவார்)’ என்று பதிலளித்தார்கள்.
Book : 43