பாடம் : 2 திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைக்) கடன் வாங்கியவன் நிலையும்… திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத் துடன் கடன் வாங்கியவன் நிலையும்….
2387. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 43