பாடம் : 1 தண்ணீர் விநியோகம். அல்லாஹ் கூறுகிறான்: ஒவ்வோர் உயிரினத்தையும் தண்ணீரி லிருந்து நாம் படைத்தோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா? (21:30) மேலும், அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் பருகும் இந்த நீரை நீங்கள் எப்போதாவது கண் திறந்து பார்த்திருக் கிறீர்களா? மேகத்தில் இருந்து,நீங்கள் இதனைப் பொழியச் செய்தீர்களா? அல்லது இதனைப் பொழியச் செய்தது நாமா? நாம் நாடியிருந்தால் இதனை உவர்ப்பு நீராக்கி விட்டிருப்போம். அப்படியிருக்க, நீங்கள் ஏன் நன்றி செலுத்துவதில்லை? (56:68-70) பாடம் : 2 தண்ணீரை தர்மம் செய்வதும் நன் கொடையாக வழங்குவதும் அதை மரண சாசனத்தின் வாயிலாக பிறர்க்கு (உடைமையாக்கித்) தருவதும் செல்லும்; அது பங்கிடப்பட்டு விட்டதாயினும் சரி (பிறருடைய பங்கையும் உள்ளடக்கி) பங்கிடப்படாததாக இருப்பினும் சரி. உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது: ரூமா கிணற்றை வாங்குபவர் யார்? அதில் அ(தை வாங்குப)வருடைய வாளி, மற்ற முஸ்லிம்களின் வாளியைப் போல் (சம உரிமை பெற்றதாக) இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே,நான் அதை வாங்கி (முஸ்லிம் களின் நலனுக்காக வக்ஃபு செய்து) விட்டேன்.2
2351. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), ‘சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான்விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று கூறினார். எனவே, நபி(ஸல்) அவர்கள், (அந்தப் பாலில்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்துவிட்டார்கள்.
Book : 42