பாடம் : 52 பள்ளிவாசலில் கற்பதும் கற்பிப்பதும் தீர்ப்பு வழங்குவதும்.
133. ஒருவர் பள்ளிவாசலில் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்கிருந்து இஹ்ராம் கட்டவேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டபோது ‘மதீனா வாசிகள் ‘துல்ஹுலைஃபா’ என்ற இடத்திலிருந்தும், ஷாம் வாசிகள் ‘ஜுஹ்ஃபா’ என்ற இடத்திலிருந்தும் நஜ்த் வாசிகள் ‘கர்ன்’ என்ற இடத்திலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
‘யமன்’ வாசிகள் ‘யலம்லம்’ என்ற இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரிடமிருந்து இந்த வார்த்தை வந்ததாக எனக்குத் தெரியவில்லை’ என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார்.
Book : 4