பாடம் : 1 (பயிரிடப்பட்ட) நிலத்திலிருந்தும் (நடப்பட்ட) மரத்திலிருந்தும் மக்களோ, பிராணிகளோ பறவைகளோ உண்ணும் பட்சத்தில் அந்த விவசாயமும் மரம் நடுவதும் சிறப்புப் பெறுகின்றன. அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் விதைக்கின்ற இந்த விதை யைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இதன் மூலம் பயிர் களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா? நாம் நாடினால் இவற்றைப்பதர்களாய் ஆக்கி விட்டிருப்போம். (56:63-65)
2290. ஹம்ஸா அல் அஸ்லமி(ரலி) அறிவித்தார்
உமர்(ரலி) என்னை ஸகாத் வசூலிப்பவராக அனுப்பினார். (நான் சென்ற ஊரில்) ஒருவர் தம் மனைவியின் அடிமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தார். உடனே நான் அந்த மனிதருக்காக ஒரு பிணையாளைப் பிடித்து வைத்துக் கொண்டு உமர்(ரலி) அவர்களிடம் சென்றேன். உமர்(ரலி) அதற்கு முன்பே அவருக்கு, அவர் (மனைவியின் அடிமைப் பெண் தமக்கும் அடிமைப்பெண்தான் என்று கருதி) அறியாமையால் செய்த காரணத்தினால் (கல்லெறிந்து கொல்லாமல்) நூறு கசையடி கொடுத்திருந்தார்கள்.
இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்களைக் குறித்து ஜரீர், அஷ்அஸ் இருவரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் ‘இஸ்லாத்தைவிட்டுச் சென்றவர்களை பாவமன்னிப்புக் கேட்கச் செய்யுங்கள். அவர்களுக்காகப் பிணையாட்களை ஏற்படுத்துங்கள் என்று கூறினர். அவ்வாறே அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர். உறவினர்கள் அவர்களுக்குப் பிணை நின்றனர்.
பிணையாளி இறந்துவிட்டால் அவர்மீது பொறுப்பில்லை (அவரின் வாரிசிடம் எதுவும் கேட்க முடியாது) என்று ஹம்மாது கூறுகிறார்.
பிணையாளி இறந்துவிட்டாலும் அவரின் பொறுப்பு நீங்கவில்லை என்று ஹகம் கூறுகிறார்.
Book : 39