38:2289 ஹவாலா (ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல்)


பாடம் : 3 இறந்தவர் கொடுக்க வேண்டிய கடனுக்கு மற்றொருவர் பொறுப்பேற்றால் அது செல்லும். 

2289. சலமா பின் அக்வஃ (ரலி) அறிவித்தார். 
நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள் ‘நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவர் கடனாளியா?’ என்று கேட்டபோது நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றனர். ‘ஏதேனும் (சொத்தை) இவர்விட்டுச் சென்றிருக்கிறாரா?’ என்று நபி(ஸல்) கேட்டபோது ‘இல்லை’ என்றனர். நபி(ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது ‘இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ‘நபி(ஸல்) அவர்கள் ‘இவர் கடனாளியா?’ என்று கேட்டபோது ‘ஆம்’ எனக் கூறப்பட்டது. ‘இவர் ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது ‘இல்லை’ என்றனர். ‘இவர் எதையேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘இவர் கடனாளியா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது ‘மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்’ என்று நபித்தேழர்கள் கூறினார். நபித்தோழர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்’ என்றனர். அப்போது அபூ கதாதா(ரலி) ‘இவரின் கடனுக்கு நான் பொறுப்பு; தொழுகை நடத்துங்கள்’ என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். 
Book : 38