37:2264 வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

பாடம் : 4 மூன்று நாட்களுக்குப் பின்போ, ஒரு மாதத்திற்குப் பின்போ, ஒரு வருடத்திற்குப் பின்போ வேலை செய்வதற்காக, இப்போதே கூலியாளைப் பேசி வைத்துக் கொள்ளலாம்; முன்னர் அவர்கள் பேசிக் கொண்ட நிபந்தனைகள் உரிய நேரம் வந்ததும் செல்லுபடியாகும். 
2264. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் பனூ தீல் குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டுவதற்காகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் மார்க்கத்தில் இருந்தார். நபி(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் தம் ஒட்டகங்களை அவரிடம் கொடுத்து ‘மூன்று இரவுகள் கழித்து எங்கள் ஒட்டகங்களுடன் ஸவ்ர் குகையில் எங்களைச் சந்திக்க வேண்டும்’ என்று அவரிடம் கூறினார்கள். அவர், (அவ்வாறே) மூன்றாம் நாள் காலையில் அவர்களின் ஒட்டகங்களுடன் அவர்களைச் சந்தித்தார். 
Book : 37