30:1893 நோன்பு

1893. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
குறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி(ஸல்) அவர்களும் ஆஷுரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் ‘(ஆஷுரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்!விட்டுவிட விரும்புபவர் அதைவிட்டுவிடட்டும்!’ எனக் கூறினார்கள். 
Book :30