29:1867 மதீனாவின் சிறப்புகள்

பாடம் : 1 மதீனாவின் புனிதம். 
1867. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
‘மதீனா நகர் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத்தின் பெயரால்) புதியது எதுவும் உருவாக்கப்படக் கூடாது! (மார்க்கத்தின் பெயரால்) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை ஏற்படுத்துகிறவர் மீது அல்லாஹ்வுடைய.. வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்!’ 
என அனஸ்(ரலி) அறிவித்தார். 
Book : 29